ஓணத்திற்காக இந்த மாதம் தாம்பரம்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்
ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட வாரத்தில் இரு முறை இயக்கப்படும் தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரெயில் இந்த மாதமும் அதன் சேவையை நீடித்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. கொச்சுவேலி வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில், வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி, 8-ஆம் தேதி, 13-ஆம் தேதி, 15-ஆம் தேதி, 20-ஆம் தேதி, 22-ஆம் தேதி ஆகிய நாட்களில், இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும்.