மணிப்பூர்: மூன்று நாட்களுக்குப் பிறகு ஐந்து மாவட்டங்களில் நிபந்தனையுடன் நீக்கப்பட்ட இணையத்தடை
மணிப்பூர் அரசு ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பிராட்பேண்ட் இணைய சேவைகளுக்கான தடையை நிபந்தனை அடிப்படையில் நீக்கியது. இருப்பினும், மொபைல் இணைய சேவைகளின் இடைநிறுத்தம் அப்படியே இருக்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். தீவிரவாதிகளின் தாக்குதல்களை கையாள தவறியதால், மாநிலத்தின் டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி 5 நாட்கள் இணையம் மற்றும் மொபைல் சேவைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ஹாட்ஸ்பாட் பயன்படுத்த தடை
மணிப்பூரில் கமிஷனர் (உள்துறை) என். அசோக் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்பட்டு, தாராளமயமாக்கப்பட்ட முறையில், பிராட்பேண்ட் சேவை (ஐஎல்எல் மற்றும் எஃப்டிடிஹெச்) இடைகால தடையை நீக்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து முடிவை எடுத்துள்ளது." "நிலையான ஐபி மூலம் இணைப்பு இருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட சந்தாதாரர் தற்போதைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த இணைப்பையும் ஏற்க மாட்டார்." கூடுதலாக, "எந்த ரூட்டரிலிருந்தும் வைஃபை/ஹாட்ஸ்பாட்கள் அனுமதிக்கப்படாது" என்றும், உள்ளூர் அளவில் சமூக ஊடகங்கள் மற்றும் VPNகளைத் தடுப்பது சந்தாதாரரால் செயல்படுத்தப்படும் என்றும் அது கூறியது.
மொபைல் பயன்பாட்டிற்கு தடை
எவ்வாறாயினும், சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரவுவது பற்றிய கவலைகள் காரணமாக, போராட்டக்காரர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை அணிதிரட்டலாம் என்பதாலும், இதனால் உயிரிழப்பு மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்பதாலும், மொபைல் இணையத் தரவை இடைநிறுத்துவதைத் தொடர மாநில அரசு முடிவு செய்தது. மணிப்பூர் போராட்டத்தின் விளைவாக மாணவர்களுக்கும், பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் உட்பட 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, சுராசந்த்பூர் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியான ஷேஜாங் பகுதியில் 7.5 அடி நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை பாதுகாப்புப் படையினர் மீட்டதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர்.