நடிகை மலைக்கா அரோராவின் தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை என்ன தெரிவிக்கிறது?
பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான மலைக்கா அரோராவின் தந்தை அனில் மேத்தாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பல காயங்களால் இறந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று, செப்டம்பர் 11, அனில் மேத்தா தனது மனைவியுடன் தங்கியிருந்த மும்பையின் பாந்த்ராவின் அல்மேடா பார்க் பகுதியில் உள்ள "ஆயிஷா மேனர்" என்ற கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்தார். மேத்தா கட்டிடத்தில் இருந்து குதித்த போது மலைக்கா அரோராவின் தாயார் கட்டிடத்தில் உள்ள ஆறாவது மாடியில் தான் இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மும்பை காவல்துறையின் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனில் மேத்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
நேற்று இரவே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை
மும்பையின் பாபா மருத்துவமனையில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் இறுதியில் அவரின் மரணத்திற்கு "பல காயங்கள்" காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்ட நடிகை மலாய்கா, தந்தையின் துயர மரணம் குறித்து குடும்பத்தின் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்திருப்பதாக தெரிவித்திருந்தார். "எங்கள் அன்பான தந்தை அனில் மேத்தாவின் மறைவை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவர் ஒரு மென்மையான உள்ளம், ஒரு அர்ப்பணிப்புள்ள தாத்தா, அன்பான கணவர் மற்றும் எங்கள் சிறந்த நண்பர். இந்த இழப்பால் எங்கள் குடும்பம் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளது.இந்த கடினமான நேரத்தில் தனியுரிமை, உங்கள் புரிதல், ஆதரவு மற்றும் மரியாதையை நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" எனத்தெரிவித்தார்.