தளபதி 69: 'One Last Time' என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்
நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்குமென நம்பப்படும் 'தளபதி 69' குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில், அது உறுதி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பினை இன்று மாலை 5 மணிக்கு KVN தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியோவில், 'One last time' என்று குறிப்பிட்டு விஜய் ரசிகர்களின் நெகிழ்ச்சியான கருத்துகளை தொகுத்து முக்கியமான அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் கூறியிருக்கின்றனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பதை இயக்குனரும் தெரிவித்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. KVN என்கிற இந்த தயாரிப்பு நிறுவனம் இப்போது கன்னடத்தில் யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.