விஜய் ரசிகர்களே! 'தளபதி 69' பற்றி மாலை 5 மணிக்கு வெளியாகிறது அறிவிப்பு
நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என நம்பப்படும் 'தளபதி 69' குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில், அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பதை இயக்குனரும் தெரிவித்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழுநேரமாக இறங்கபோவதாக அறிவித்திருந்தார். சமூக பிரச்சனைகளை ஜனரஞ்சகமான முறையில் திரையில் காட்டுவதில் இயக்குனர் ஹெச்.வினோத் கில்லாடி என்பதால், அவருடன் விஜய் கை கோர்த்துள்ளது, அவருடைய அரசியல் என்ட்ரிக்கு நிச்சயமாக ஒரு திருப்புமுனையாகவே இருக்கும்.