LOADING...
பட்ஜெட் 2026 நேரலை: அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையை எப்போது, எங்கு பார்க்கலாம்? முழு விபரங்கள்
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை நேரலை விவரங்கள்

பட்ஜெட் 2026 நேரலை: அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையை எப்போது, எங்கு பார்க்கலாம்? முழு விபரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 31, 2026
09:12 am

செய்தி முன்னோட்டம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தாக்கல் செய்ய உள்ளார். 2017 ஆம் ஆண்டிலிருந்து பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். காலை 11:00 மணி அளவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரை தொடங்கும். நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

நேரலை

நேரலையில் எங்கு பார்க்கலாம்?

பட்ஜெட் உரையை நீங்கள் உங்கள் கைப்பேசி அல்லது தொலைக்காட்சியில் நேரலையில் காணப் பல வசதிகள் உள்ளன: தொலைக்காட்சி: சன்சத் டிவி மற்றும் டிடி நியூஸ் ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இணையதளம்: அரசின் அதிகாரப்பூர்வ பட்ஜெட் இணையதளமான www.indiabudget.gov.in பக்கத்தில் பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் பதிவேற்றம் செய்யப்படும். யூடியூப்: சன்சத் டிவி, தூர்தர்சன் மற்றும் பிஐபி (பத்திரிகை தகவல் பணியகம்) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் நேரலை செய்யப்படும். செய்தி சேனல்கள்: நியூஸ் 18 தமிழ்நாடு, புதிய தலைமுறை போன்ற முக்கியத் தமிழ் செய்தி சேனல்களிலும் உடனுக்குடன் நேரடித் தமிழ் விளக்கங்களைப் பெறலாம்.

முக்கியத்துவம்

பட்ஜெட் 2026 இன் முக்கியத்துவம்

மோடி 3.0 அரசாங்கத்தின் இரண்டாவது முழுமையான பட்ஜெட் இதுவாகும். விக்சித் பாரத் 2047 என்ற தொலைநோக்குப் பார்வையுடன், உள்கட்டமைப்பு மேம்பாடு, வரிச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் இந்த பட்ஜெட் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 அன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 29 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1 அன்று காலை 11 மணிக்கு தொடங்கும். கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 அன்று நிறைவடைகிறது.

Advertisement