சிபிஐ கைது நியாயமற்றது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) ஜாமீன் வழங்கியது. சிபிஐ கைது செய்தது நியாயமற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம், நீண்ட காலம் சிறையில் இருப்பது அநியாயமாக சுதந்திரத்தை பறிப்பதாகும் என்று வலியுறுத்தியது. இருப்பினும், நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐயால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லுபடியாகும் என்றும், இந்த கைது சட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற நான்காவது அரசியல் தலைவர்
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பாரத ராஷ்டிர சமிதியின் கே.கவிதா ஆகியோருக்குப் பிறகு இந்த வழக்கில் சிறையிலிருந்து வெளியேறும் நான்காவது உயர்மட்டத் அரசியல் தலைவர் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாகக், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் முதன்முதலில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் காவலில் இருந்தபோது, ஊழல் வழக்கில் சிபிஐயால் ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 12 அன்று, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.