டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிபந்தனைகள் என்ன?
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் வழக்கின் தீர்ப்பில், சிபிஐ கைது செய்தது நியாயமற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம், நீண்ட காலம் சிறையில் இருப்பது அநியாயமாக சுதந்திரத்தை பறிப்பதாகும் என்று வலியுறுத்தியது. இருப்பினும், நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐயால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லுபடியாகும் என்றும், இந்த கைது சட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. முதல்வர் மார்ச் 21 அன்று சரணடைந்தார், அன்றிலிருந்து சிறையில் உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு அவர் சிறையிலடைப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று அறிவிக்கப்படுகிறது.
ஜாமீன் நிபந்தனைகள்
இந்த ஜாமீன் உத்தரவில் கெஜ்ரிவாலுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை: இந்த வழக்கின் தகுதி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்க கருத்து எதுவும் தெரிவிக்கக்கூடாது. ED விஷயங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இந்த விஷயத்திலும் பொருந்தும். (புள்ளி 3-6) அவர் வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ரூ.10 லட்சம் பிணையத்தை வழங்க எஸ்சி உத்தரவிட்டுள்ளது. அவர் முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி செயலகத்திற்கு செல்லக்கூடாது
ஜாமீன் நிபந்தனைகள்
டெல்லியின் லெப்டினன்ட் கவர்னரின் அனுமதி/ஒப்புதல் பெறுவதற்குத் தேவைப்படும் மற்றும் அவசியமானால் தவிர, அதிகாரப்பூர்வ கோப்புகளில் அவர் கையெழுத்திடக் கூடாது. அவர் சார்பாக செய்யப்பட்ட அறிக்கைக்கு அவர் கட்டுப்படுவார் தற்போதைய வழக்கில் அவரது பங்கு குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்க்கூடாது மற்றும் அவர் எந்த சாட்சியுடனும் தொடர்பு கொள்ளக்கூடாது மற்றும்/அல்லது வழக்குடன் தொடர்புடைய எந்த அதிகாரப்பூர்வ கோப்புகளையும் அணுகக்கூடாது.