சர்தார் 2 டீஸர் தயார்..விரைவில் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு
சர்தார் 2 படத்தில் டைட்டில் டீசர் தயாராகி விட்டதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 'சர்தார்'. இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்திய உளவாளியை பற்றிய இத்திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. அதன் தொடர்ச்சியாக படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில், படத்தின் டைட்டில் டீஸர் விரைவில் வெளியிடப்படும் எனவும், அதனை மெய்யழகன் படத்துடன் இணைந்து திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.