
பொங்கல் விடுமுறை: ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்
செய்தி முன்னோட்டம்
2025ஆம் ஆண்டு, பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.
ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும்.
அதற்கு முன்னர் போகி பண்டிகை ஜனவரி 13ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால், பலர் அதன் முந்தைய வாரத்துடன் சேர்த்து 6 நாட்கள் விடுமுறையை கழிக்க திட்டமிடுவார்கள் என்பது கருத்தில் கொண்டு, தென்னக ரயில்வே டிக்கெட் முன்பதிவுகளை இன்று துவங்கியது.
வழக்கம்போல, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஆனால், முன்பதிவு துவங்கிய ஐந்தே நிமிடங்களில் மளமளவென டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக சேதிகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்
பொங்கல் பண்டிகை – டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன...#PongalFestival #IRCTC #SouthernRailways #Ticket #Train #JayaPlus pic.twitter.com/xoRyvNvuz8
— Jaya Plus (@jayapluschannel) September 12, 2024