ஒரே ஓவரில் மூன்று 4'ஸ், 6'ஸ்: இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மட்டையை சுழற்றிய டிராவிஸ் ஹெட்
செப்டம்பர் 11 அன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20I போட்டியில் தனது அதிரடி ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் T20I எதிர்கொண்டபோது, டிராவிஸ் ஹெட் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். சூறாவளியாக காலத்தில் இறங்கிய டிராவிஸ் ஹெட் வெறும் 23 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸுக்கு தொனியை அமைத்தது. அவரது ஆக்ரோஷமான தொடக்கமானது, மாட் ஷார்ட்டுடன் 86 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒரே ஓவரில் 30 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் டிராவிஸ்.
Twitter Post
இங்கிலாந்திற்கு எதிராக சவாலான இலக்கு
டிராவிஸ் ஹெட் மற்றும் ஷார்ட்டின் அதிரடி கூட்டணி மற்றும் ஜோஷ் இங்கிலிஸின் சுருக்கமான ஆனால் முக்கியமான அதிரடி ஆட்டம், ஆஸ்திரேலியா அணியினை 179 ரன்களை பதிவு செய்ய உதவியது. இந்த ஆக்ரோஷமான பேட்டிங் ஆட்டம் மிடில் ஆர்டர் போராட்டங்களுக்கு ஈடுகொடுத்து இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. இறுதியில், சீன் அபோட் மற்றும் ஆடம் ஜம்பா தலைமையிலான ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அணியின் வெற்றியை மேலும் உறுதி செய்தது. ஹெட்டின் ஆக்ரோஷமான மனநிலை, ஷார்ட், இங்கிலிஸ் மற்றும் பந்துவீச்சாளர்களின் முக்கிய பங்களிப்புகளுடன் இணைந்து, ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஹெட்டின் அணுகுமுறையும், அணியின் கூட்டுச் செயற்பாடும் வரவிருக்கும் போட்டிகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.