அட்லீ- ஷாருக்கானின் 'ஜவான்' நவம்பர் மாதம் ஜப்பானில் பிரமாண்ட ரிலீஸ்!
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானின் 2023 பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜவான்' இந்த ஆண்டு ஜப்பானிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ள இந்த ஆக்ஷன் டிராமா திரைப்படம், வெளியானதும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நவம்பர் 29ஆம் தேதி ஜப்பானிய திரைகளில் 'ஜவான்' வெளியாகும் என்று அட்லீ தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜவான் திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆனதை சமீபத்தில் ஷாருக்கான் கொண்டாடினார். அவருடைய பதிவில், "நாங்கள் மிகுந்த மனதுடன் உருவாக்கிய படம்..இன்று ஒரு வயதை எட்டியுள்ளது...@Atlee_dir-ன் கதை சொல்லும் திறமையும், தொலைநோக்கு பார்வையும் இல்லாவிட்டால், இந்தப் படம் சாத்தியமில்லை, நிச்சயமாக... மாஸ்ஸி மாஸ்ஸி!!!" என்று பதிவிட்டிருந்தார். அனிருத்தின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட்.