Page Loader
சூர்யா- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கம்
'வாடிவாசல்' படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கம்

சூர்யா- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 13, 2024
01:22 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2022ஆம் ஆண்டு, நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானது முதல் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. ஏறு தழுவும் வீரர்களை பற்றிய படம் இது எனக்கூறப்பட்டது. இதற்காக சூர்யா ஜல்லிக்கட்டு பயிற்சி மேற்கொண்டார் எனவும் செய்திகள் வெளியாகின. எனினும் அதன் பின்னர் பல காரணங்களால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளி போனது. வெற்றிமாறனோ 'விடுதலை' படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி விட்டார். 'விடுதலை' படம் தந்த வெற்றியின் காரணமாக அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது எடுத்து வருகிறார். மறுபுறம் சூர்யாவும், 'கங்குவா', கார்த்திக் சுப்புராஜின் திரைப்படம் என பிசியாக விட்டார். இந்த சூழலில் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு 2025 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'வாடிவாசல்' படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கம்