
நடிகை தீபிகா படுகோனையும், குழந்தையையும் நேரில் சந்தித்து வாழ்த்திய ஷாருக்கான்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தன்னுடைய சக நடிகையான தீபிகா படுகோனையும், அவரது குழந்தையும் நேற்று இரவு மருத்துவமனையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் தீபிகாவின் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் இருந்தார்.
ஷாருக்கானின் கார், தீபிகா அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து வெளியேறும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.
செப்டம்பர் 8 ஆம் தேதி, தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கிற்கு பெண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் இன்னும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.
முன்னதாக இவர்களை தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் மருத்துவமனைக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். தீபிகா படுகோன் கடைசியாக 'கல்கி 2898 கிபி' படத்தில் நடித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
மருத்துவமனையிலிருந்து வெளியேறும் ஷாருக்கான்
#ShahRukhKhan spotted after visiting #deepikapadukone and her new born baby at a hospital in Mumbai today. pic.twitter.com/XroU0Cp51s
— Aamir Khan (@AAMIRSRKs45) September 13, 2024