மீண்டும் இணையும் ஹேட்ரிக் கூட்டணி: வடிவேலு- சுந்தர் சி இணையும் 'கேங்கர்ஸ்'
சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணையவுள்ள புதிய படத்திற்கு 'கேங்கர்ஸ்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த காமெடி படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. கைப்புள்ள, நாய் சேகர், வரிசையில் 15 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி மற்றொரு வெற்றி கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. 'அரண்மனை 4' படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு மீண்டும் நடிக்கிறார். இதில், சுந்தர்.சி நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கேங்கர்ஸ்' படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் மேலும், கேத்ரின் தெரசா, முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.