Page Loader
ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு மைக்ரோசாப்ட் 365 சேவைகள் முடக்கம்
மைக்ரோசாப்ட் 365 சேவை 16,000 க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு முடங்கியது

ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு மைக்ரோசாப்ட் 365 சேவைகள் முடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 13, 2024
11:50 am

செய்தி முன்னோட்டம்

செயலிழப்பு கண்காணிப்பு இணையதளமான Downdetector.com கூற்றின்படி, மைக்ரோசாப்டின் productivity software-இன் தொகுப்பு வியாழக்கிழமை 16,000 க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு முடங்கியது. "பயனர்கள் பல மைக்ரோசாப்ட் 365 சேவைகளை அணுக முடியாத சிக்கலை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்," என்று விண்டோஸ் நிறுவனம் Xஇல் ஒரு இடுகையில் தெரிவித்தது. 8.5 மில்லியன் Windows சாதனங்களை பாதித்த CrowdStrike எனும் இணைய பாதுகாப்பு சேவை வழங்குனரின் தவறான மென்பொருள் புதுப்பிப்புக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப்பிறகு சமீபத்திய மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு வந்துள்ளது. அறிக்கையின்படி, விமான நிறுவனங்கள் , வங்கிகள் மற்றும் சுகாதாரம் வரையிலான பல தொழில்களில் அதன் செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. இதனால் மைக்ரோசாப்ட் பங்குகள் 0.46 சதவீதம் குறைந்து $421.08 இல் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும் லைவ்மின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

செயலிழப்பு 

பலர் செயலிழப்பு குறித்து புகார் 

மைக்ரோசாப்ட் செயலிழப்பின் தன்மை மற்றும் காரணம் பற்றிய கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை மற்றும் எப்போது மீட்கப்படும் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை. ஏஜென்சி அறிக்கையின்படி, அதன் Azure கிளவுட் இயங்குதளம், AT&T நெட்வொர்க்குகளில் இருந்து மைக்ரோசாப்ட் சேவைகளை இணைக்கும் சாத்தியமான சிக்கலின் வாடிக்கையாளர் அறிக்கைகளை ஆராய்வதாக X பிளாட்ஃபார்மில் கூறியது. ஏறக்குறைய 4,000 பயனர்கள், AT&T சேவைகளில் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர், மேலும் 16,500க்கும் மேற்பட்ட பயனர்கள் மைக்ரோசாப்டின் 365 தயாரிப்புகளை 9:12 AM (ET) வரை அணுகுவதில் சிக்கல் இருப்பதாகக் கூறியுள்ளனர். எனினும் டெலிகாம் ஆபரேட்டர் AT&T, கருத்துகளுக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.