4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு
வார இறுதியில் ஓணம் பண்டிகையும், அதைத்தொடர்ந்து மிலாடி நபியும் வருவதனால், இந்த வாரம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவிருக்கிறது. இதனையடுத்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய திட்டமிடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து வெளியான அறிவிப்பில், 'தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்' என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.