சென்னை தாம்பரம்- ராமநாதபுரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சேவை வாரத்திற்கு 3 நாட்கள் இருக்குமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் பண்டிகைகளையும், தொடர் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை சமாளிக்க மக்கள் பயன்பாட்டிற்காக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக வாரத்திற்கு 3 நாட்கள் ராமநாதபுரம்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன், சனி, திங்கள் ஆகிய தினங்களில் தாம்பரத்திலிருந்து, ராமநாதபுரத்திற்கு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்கமாக வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய நாட்களில் ராமநாதபுரத்திலிருந்து தம்பரத்திற்கு இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கிடைக்கிறது.