NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 2 தினங்களுக்கு 19 எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 2 தினங்களுக்கு 19 எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம்
    சென்னையில் 2 தினங்களுக்கு எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம்

    சென்னையில் 2 தினங்களுக்கு 19 எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 13, 2024
    03:07 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கடற்கரை யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால், செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    அது பற்றி வெளியான அறிவிப்பில், மாற்றத்திற்குள்ளான ரயில்களும், அதன் வழித்தடங்களை தரப்பட்டுள்ளன.

    இதோ உங்கள் கவனத்திற்கு:

    சென்னை கடற்கரை - தாம்பரம்: செப்டம்பர் 13 மற்றும் 16 ஆம் தேதிகளில் இரவு 8.25, 8.55 மற்றும் 10.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்படுகின்றன.

    திருவள்ளூர் - சென்னை கடற்கரை: செப்டம்பர் 13 மற்றும் 16 ஆம் தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்படும் ரயிலும், சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.

    மின்சார ரயில்

    மின்சார ரயில் சேவையில் மாற்றம்

    கடற்கரை - அரக்கோணம்: செப்டம்பர் 14 மற்றும் 17 ஆம் தேதிகளில் அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

    கும்மிடிப்பூண்டி - கடற்கரை: செப்டம்பர் 13 மற்றும் 16 ஆம் தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. அதேபோல, கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

    சென்னை கடற்கரை - தாம்பரம்: செப்டம்பர் 13 மற்றும் 16 ஆம் தேதிகளில் இரவு 11.05, 11.30 மற்றும் 11.59 மணிக்கு புறப்படும் ரயில்களின் ஒரு பகுதி சேவை மட்டும், அதாவது கடற்கரை - எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

    மின்சார ரயில்

    மின்சார ரயில் சேவையில் மாற்றம்

    கடற்கரை- செங்கல்பட்டு: செப்டம்பர் 14 மற்றும் 17ஆம் தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    செங்கல்பட்டு- கடற்கரை: செப்டம்பர் 13 மற்றும் 16ஆம் தேதிகளில் இரவு 9.10, 10.10 மற்றும் 11.00 மணிக்கு புறப்படும் ரயில்கள், எழும்பூர்-கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

    கூடுவாஞ்சேரி- கடற்கரை: செப்டம்பர் 13 மற்றும் 16ஆம் தேதிகளில் இரவு 10.10, 10.40 மற்றும் 11.15 மணிக்கு புறப்படும் ரயில்கள், தாம்பரம்- கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

    திருமால்பூர்- கடற்கரை: செப்டம்பர் 13 மற்றும் 16ஆம் தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எழும்பூர்- கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்
    ரயில் நிலையம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    சென்னை

    ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்
    சென்னைக்கு வந்த ஜஸ்பிரித் பும்ரா..ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற வீடியோ வைரல் ஜஸ்ப்ரீத் பும்ரா
    சென்னையில் 'ஆகஸ்ட் 26' வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: விபத்தில்லா நாளாக அறிவிப்பு விபத்து
    தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்  வந்தே பாரத்

    ரயில்கள்

    திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து திருச்செந்தூர்
    சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு  சென்னை
     'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல் ஆந்திரா
    பயண டிப்ஸ்: வாழ்நாள் அனுபவத்தை தரும் 5 ஆடம்பரமான ரயில் பயணங்கள் பயணம்

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  தெற்கு ரயில்வே
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025