கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்; மாநில அரசு போர்க்கால நடவடிக்கை
மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.
ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த குழு அமைக்க மத்திய அரசு பரிசீலனை
ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த, துறைகளுக்கிடையேயான குழுவை நிறுவ மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பக்கவாதம் குறித்த அச்சமா? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
உலகளவில் மரணம் மற்றும் உடல் இயலாமைக்கு பக்கவாதம் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் தாமதமாகும் வரை பலருக்கு அவற்றின் ஆபத்து பற்றி தெரியாது.
அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை கணிசமாக மாற்றியமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
2026-27 நிதியாண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 13% ஆக உயரும் என கணிப்பு
2026-27 நிதியாண்டில் மின்சார இரு சக்கர வாகனங்கள் 13%க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டிருக்கும் என முதலீட்டு வங்கி நிறுவனமான ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது.
முதல் தனியார் விண்வெளி நடை பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் விண்கலம்
ஸ்பேஸ் எக்ஸின் போலாரிஸ் டான் தனது ஐந்து நாள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) அன்று அதன் நான்கு விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பியது.
நிலத்தடி நீர்மட்ட இழப்பை சரிக்கட்ட மாற்று பயிரிடுதல் தான் சரியான வழி; ஐஐடி ஆய்வில் தகவல்
ஏறத்தாழ 40% நெல் சாகுபடியை மாற்றுப் பயிர்களுக்கு மாற்றுவதன் மூலம், வட இந்தியாவில் 2000ஆம் ஆண்டு முதல் இழந்த 60-100 கன கிலோமீட்டர் நிலத்தடி நீரை மீட்டெடுக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு
எண்ணெய் வித்துக்களின் விலை குறைவதிலிருந்து உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க, சனிக்கிழமை (செப்டம்பர் 14) முதல், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் ஆகியவற்றின் மீது இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்துள்ளது.
'மனசிலாயோ'; வேட்டையன் பாணியில் ஓணம் திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கூலி படக்குழு
வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலிற்கு ஆட்டம் போட்டு கூலி படக்குழு வித்தியாசமாக ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.
வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 துணைக் கேப்டனான ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
மியான்மரில் 74 பேர் பலியான பரிதாபம்; தென்கிழக்காசியாவை சூறையாடிய யாகி சூறாவளி
யாகி சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர் மற்றும் இன்னும் பலரைக் காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகுது வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு? இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ளவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஓய்வு மற்றும் தனிப்பட்ட இலக்குகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 16) அன்று தமிழகத்தில் பல்லடம் மின் வட்டத்திற்கு உட்பட சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கேரளாவில் களைகட்டிய ஓணம் திருவிழா; நடிகர் விஜய் வாழ்த்து
ஓணம் திருவிழாவை முன்னிட்டு நடிகர் விஜய் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவின் மிக முக்கியமான பண்டிகையாக ஓணம் திருவிழா நடைபெறுகிறது.
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற காரணம் பிரியங்காதான்? உண்மையை உடைத்த மணிமேகலை
ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஐந்து சீசன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 5இன் தொகுப்பாளர் மணிமேகலை தற்போது திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
மெய்யழகன் பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தஞ்சை தமிழில் பேசி அசத்திய நடிகர் கார்த்தி
மெய்யழகன் பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தஞ்சாவூர் தமிழில் பேசிய காணொளி வைரலாகி வருகிறது.
டயமண்ட் லீக் போட்டியில் 0.01 மீட்டரில் வெற்றி வாய்ப்பை இழந்தார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சனிக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற்ற 2024 டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
நடிகை மேகா ஆகாஷின் திருமண வரவேற்பு விழா; நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
நடிகை மேகா ஆகாஷின் திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ்
நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
ஜனநாயகத்தின் ஜோதி; நடிகர் விஜயின் கடைசி படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர்கள் படம் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சனிக்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்டனர்.
கொல்கத்தாவில் குப்பை அள்ளிபோது திடீரென வெடித்த பொருள்; ஒருவருக்குக் காயம்
சனிக்கிழமை (செப்டம்பர் 14) பிற்பகல் 1.45 மணியளவில் மத்திய கொல்கத்தாவில் உள்ள ப்ளாச்மேன் தெரு மற்றும் எஸ்என் பானர்ஜி சாலை சந்திப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 58 வயதான குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
72% வளர்ச்சி; இந்திய வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோ எஸ்யூவி
கார் விற்பனையில் ஒட்டுமொத்த மந்தநிலை இருந்தபோதிலும், இந்தியாவின் வாகனச் சந்தை மைக்ரோ எஸ்யூவிகளை நோக்கி கணிசமான மாற்றத்தைக் கண்டு வருகிறது.
இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை; திங்கட்கிழமை (செப்.16) தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ சேவையை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தனது இரண்டு நாள் பயணத்தின் போது தொடங்கி வைக்க உள்ளார்.
அதிபர் தேர்தலில் வாக்களிப்பு; விண்வெளியில் இருந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய சுனிதா வில்லியம்ஸ்
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விண்வெளியில் இருந்து பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேரளாவில் ஓணம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கேரள மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
விதிகளை மீறிய NBFC நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம்; ஆர்பிஐ அதிரடி உத்தரவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC), ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் ஆர்பிஐ உத்தரவுகளை பின்பற்றாததற்காக அபராதம் விதித்துள்ளது.
விண்ணுக்கு இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செயற்கைக்கோளை ஏவியது ஈரான்
ஈரான் தனது துணை ராணுவப் புரட்சிப் படையால் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024இல் இந்திய ஹாக்கி அணி தனது ஐந்தாவது குரூப் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
அமரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு; படக்குழு அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவருவதில் படக்குழு தீவிரமாக உள்ளது.
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் எனத் தகவல்; உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா?
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு சிவப்பு மண் ஆடுகளத்தை பயன்படுத்தத் திட்டம்
வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.
கேப்டனாக எம்எஸ் தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவு; போஸ்டர் வெளியிட்டு நினைவுகூர்ந்த சிஎஸ்கே
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்கள் என்ற பட்டியலை எடுத்தால், அதில் எம்எஸ் தோனி முதன்மையான இடத்தைப் பெறுவார்.
சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; காவல்துறை பலத்த பாதுகாப்பு
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், இதற்காக பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்
தமிழக அரசின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணம் வெற்றி; ரூ.7,600 கோடி முதலீட்டுடன் தமிழகம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) சென்னை வந்தடைந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகல்? இந்திய வீரர் டி நடராஜன் வெளியிட்ட முக்கிய தகவல்
2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்றுத் தொடர் வெற்றியில் முக்கிய வீரரான இந்திய கிரிக்கெட் அணி வீரர் டி நடராஜன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.