ஜனநாயகத்தின் ஜோதி; நடிகர் விஜயின் கடைசி படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர்கள் படம் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சனிக்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்டனர். படத்தின் புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ள கேவிஎன் புரொடக்ஷன்ஸ், நடிகர் விஜயை வரவேற்று, படத்தை எச் வினோத் இயக்குவார் என்பதை உறுதிப்படுத்தியது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்று அந்த போஸ்டரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி 69 கேவிஎன் புரொடக்ஷன்ஸின் முதல் தமிழ் படம், எச் வினோத் நடிகர் விஜயை இயக்கம் முதல் படம் மட்டுமல்ல, விஜயின் சினிமா கேரியரின் கடைசி படமும் ஆகும். போஸ்டரில், விஜய் ஜனநாயகத்தின் ஜோதியை கையில் ஏந்தியுள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது. எனவே இது ஒரு அரசியல் விழிப்புணர்வு படம் போல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.