
கேரளாவில் களைகட்டிய ஓணம் திருவிழா; நடிகர் விஜய் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
ஓணம் திருவிழாவை முன்னிட்டு நடிகர் விஜய் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவின் மிக முக்கியமான பண்டிகையாக ஓணம் திருவிழா நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் இறுதி நாள் திருவோணமாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, திருவோணமான இன்று (செப்டம்பர் 15) கேரளாவில் உள்ள மக்கள் மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் திருவிழாவை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்!" என தமிழிலும் மலையாளத்திலும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் விஜயின் எக்ஸ் பதிவு
மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த #ஓணம் நல்வாழ்த்துகள்!
— TVK Vijay (@tvkvijayhq) September 15, 2024
എന്റെ സ്വന്തം മലയാളി സുഹൃത്തുക്കൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.#HappyOnam!