NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

    திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 14, 2024
    05:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் ஓணம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கேரள மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் நாளை (15-9-2024) கொண்டாடப்படுகிறது.

    அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது.

    நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும், அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக் காணவேண்டும்.

    திராவிட உடன்பிறப்பு

    வயநாடு நிலச்சரிவிற்கு உதவியதை நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்

    திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஓர் இடர் என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்டத் தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும். அந்த வகையில்தான், அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததோடு, மீட்பு, மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம்.

    பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்டக் குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓணம் நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.

    சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழக முதல்வர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவு

    ஓணம் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி pic.twitter.com/TFHFsCdLbU

    — CMOTamilNadu (@CMOTamilnadu) September 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓணம்
    மு.க.ஸ்டாலின்
    கேரளா
    தமிழகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஓணம்

    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கேரளா
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு தமிழ்நாடு
    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, சேலம் மார்கமாக கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை ரயில்கள்
    ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளத்திற்கு, பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் பெங்களூர்

    மு.க.ஸ்டாலின்

    தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து முதல் அமைச்சர்
    புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு கலைஞர் கருணாநிதி
    முதல்வரின் ஸ்பெயின் பயணம்; துணை முதல்வராக உதயநிதி நியமனமா? உதயநிதி ஸ்டாலின்
    தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை; மம்தா பங்கெடுக்கவில்லை  இந்தியா

    கேரளா

    கேரளாவுக்கு ஷூட்டிங்கிற்கு செல்கிறார் சூப்பர்ஸ்டார்; விஜய் தங்கும் அதே ஹோட்டலில் தங்கவுள்ளார் விஜய்
    மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு  உச்ச நீதிமன்றம்
    பங்குச் சந்தைகள், ரூ.55,000 ரொக்கம்: ராகுல் காந்தி தாக்கல் செய்த ரூ.20 கோடி சொத்து மதிப்புள்ள பத்திர பிரமாணம் ராகுல் காந்தி
    'பாஜக அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும்': அவரது தந்தை ஏ.கே.ஆண்டனி பேச்சு  பாஜக

    தமிழகம்

    தமிழகத்திற்கு முதல் நாளிலேயே குவிந்த முதலீடுகள்: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் தமிழக அரசு
    மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவி சோமநாதன் பொறுப்பேற்பு மத்திய அரசு
    காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீர்; ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு காவிரி
    தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் அமலானது கட்டண உயர்வு சுங்கச்சாவடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025