இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை; திங்கட்கிழமை (செப்.16) தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ சேவையை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தனது இரண்டு நாள் பயணத்தின் போது தொடங்கி வைக்க உள்ளார். அகமதாபாத்-புஜ் வந்தே மெட்ரோ, முழுமையாக முன்பதிவு செய்யப்படாத குளிரூட்டப்பட்ட ரயில் ஆகும். இது பயணிகள் புறப்படுவதற்கு சற்று முன் டிக்கெட் வாங்க அனுமதிக்கும். மேற்கு ரயில்வே (அகமதாபாத் பிரிவு) மக்கள் தொடர்பு அதிகாரி பிரதீப் ஷர்மா, இந்த ரயிலில் 2,058 நிற்கும் மற்றும் 1,150 அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு இடமளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தினார். அகமதாபாத்-புஜ் வந்தே மெட்ரோ சேவையானது 360 கிமீ தூரத்தை ஐந்து மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும், அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கிமீ ஆகும்.
வந்தே மெட்ரோவின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்
வந்தே மெட்ரோ உள்நாட்டு செமி அதிவேக ரயிலைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஏசி கோச்சுகளைக் கொண்டுள்ளது மற்றும் பிற அதிநவீன அம்சங்களுடன் கவாச் என்ற பாதுகாப்பு கருவியையும் கொண்டுள்ளது. இந்த சேவையின் துவக்கமானது இந்தியாவின் பொது போக்குவரத்து துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. தினசரி பயணிகள் மற்றும் நீண்ட தூர பயணிகளுக்கு ஒரு புதிய பயண முறையை வழங்குகிறது. வந்தே மெட்ரோ சேவையைத் தொடங்கி வைப்பது மட்டுமின்றி, காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கன்வென்ஷன் சென்டரில், உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் எக்ஸ்போவின் (ரீ-இன்வெஸ்ட் 2024) 4வது பதிப்பையும் பிரதமர் மோடி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.