டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகல்? இந்திய வீரர் டி நடராஜன் வெளியிட்ட முக்கிய தகவல்
2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்றுத் தொடர் வெற்றியில் முக்கிய வீரரான இந்திய கிரிக்கெட் அணி வீரர் டி நடராஜன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார். 33 வயதான வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் கடுமையான பணிச்சுமை பிரச்சினைகளை இந்த நடவடிக்கைக்கு முதன்மையான காரணம் என்று குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் நடக்கவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக அவர் இந்த தகவலை தெரிவித்தார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் 2012இல் ஆஸ்திரேலியாவில் தனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுக போட்டிக்குப் பிறகு முதல் தர போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட் பால் கிரிக்கெட்டைத் தவிர்த்து வருகிறேன்
"நான் ரெட் பால் கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. நான் ரெட் பால் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்பதல்ல, ஆனால் அது எனது பணிச்சுமையை அதிகமாக்குகிறது என்று உணர்கிறேன்" என்று நடராஜன் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார். அவர் மேலும், "இப்போது, நான் ரெட் பால் கிரிக்கெட்டைத் தவிர்த்து வருகிறேன். பணிச்சுமை அதிகமாக இருக்கும் போது, எனக்கு முழங்காலில் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால், நான் அதை விளையாடுவதை நிறுத்திவிட்டேன்." என்று மேலும் கூறினார். தற்போதைக்கு ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில், ரெட் பால் கிரிக்கெட்டின் மீது தனக்கு அதிக விருப்பம் இருப்பதாக நடராஜன் கூறினார்.