
நடிகை மேகா ஆகாஷின் திருமண வரவேற்பு விழா; நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
நடிகை மேகா ஆகாஷின் திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
2019ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் மேகா ஆகாஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கிப் பாயும் தோட்டா என சிம்பு மற்றும் தனுஷுடன் நடித்தார்.
கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி, சபாநாயகன், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி திருநாவுக்கரசரின் இரண்டாவது மகனான சாய் விஷ்ணுவுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
வாழ்த்து
திருமண வரவேற்பு விழா
சென்னையில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) இரவு மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு தம்பதியின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதற்கிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட இதர அமைச்சர்களுடன் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவு
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர் அவர்களின் மகன் எஸ்.ஆர்.டி.சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை… pic.twitter.com/OQXqNfAowD
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 14, 2024
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் எக்ஸ் பதிவு
இன்று சென்னையில் நடைபெற்ற, எனது நீண்ட கால நண்பரும், முன்னாள் மத்திய-மாநில அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திரு.திருநாவுக்கரசர் அவர்களின் மகன் சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் திரு.@Udhaystalin… pic.twitter.com/IpGHcfE9Un
— KKSSR Ramachandran (@KKSSRR_DMK) September 14, 2024