
'மனசிலாயோ'; வேட்டையன் பாணியில் ஓணம் திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கூலி படக்குழு
செய்தி முன்னோட்டம்
வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலிற்கு ஆட்டம் போட்டு கூலி படக்குழு வித்தியாசமாக ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்கிறார்.
இதில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், உபேந்திரா, ஃபகத் ஃபாசில், சௌபின் சாஹிர், சுருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்ற்னர்.
கூலி படத்தில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஓணம் திருவிழாவை முன்னிட்டு, சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாட்டிற்கு ரஜினிகாந்த் படக்குழுவினருடன் ஆடுவதோடு, லோகேஷ் கனகராஜை ஆடுவதற்கு ரஜினி அழைக்க அவர் கூச்சப்படுவதுபோல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ் வெளியிட்டு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
லைகா புரடக்ஷன்ஸ் எக்ஸ் பதிவு
Onam Vibes with Coolie team!
— Lyca Productions (@LycaProductions) September 15, 2024
When THALAIVAR 😎 & team COOLIE ⌚ went The VETTAIYAN 🕶️ way for ONAM 🌸 #MANASILAAYO ft. team COOLIE ⌚ with the One & Only 🌟#Vettaiyan 🕶️ @rajinikanth @tjgnan @anirudhofficial @Dir_Lokesh @girishganges @SonyMusicSouth #HappyOnam2024 #Onam pic.twitter.com/w1KJc3E2ia