
கேப்டனாக எம்எஸ் தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவு; போஸ்டர் வெளியிட்டு நினைவுகூர்ந்த சிஎஸ்கே
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்கள் என்ற பட்டியலை எடுத்தால், அதில் எம்எஸ் தோனி முதன்மையான இடத்தைப் பெறுவார்.
43 வயதான எம்எஸ் தோனி, பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் தலைமைத் திறன்களுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.
டிசம்பர் 2004இல் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
பின்னர், 2007இல் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார்.
அறிமுகம்
இந்திய அணியின் கேப்டனாக எம்எஸ் தோனியின் அறிமுகம்
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்எஸ் தோனியின் கேப்டன்சி அறிமுகம் 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (செப்டம்பர் 14) தொடங்கியது.
அவர் 2007இல் டி20 உலகக்கோப்பையின் தொடக்க பதிப்பில் கேப்டனாக இதே தேதியில் தனது முதல் ஆட்டத்தை வென்றார்.
இந்த தொடரில் இந்தியாவின் ஸ்காட்லாந்திற்கு எதிரான தொடக்கப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 14, 2007 அன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.
இது கடுமையான மோதலாக இருந்த நிலையில், போட்டி டையில் முடிந்ததை அடுத்து பௌல் அவுட் முறையில் இந்தியா வென்றது.
இதைக் குறிப்பிடும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17 ஆண்டுகால தோனியின் கேப்டன்சி பயணத்தைப் போற்றி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை சூப்பர் கிங்ஸ் எக்ஸ் பதிவு
1⃣7⃣ years ago today, began the MaStermind's journey as captain! 💛🦁 #WhistlePodu #17YearsofCaptainCool pic.twitter.com/EVWDImrFQO
— Chennai Super Kings (@ChennaiIPL) September 14, 2024