இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சம்; சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு என்று கூறியுள்ளார். யெச்சூரியின் குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீ சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார் மற்றும் அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் தொண்டர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி." என்று குறிப்பிட்டுள்ளார். சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.