NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அதானியின் வங்கி கணக்குகளை முடக்கியது சுவிட்சர்லாந்து: ஹிண்டன்பர்க் அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதானியின் வங்கி கணக்குகளை முடக்கியது சுவிட்சர்லாந்து: ஹிண்டன்பர்க் அறிக்கை
    $310 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஆறு சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிக்கை

    அதானியின் வங்கி கணக்குகளை முடக்கியது சுவிட்சர்லாந்து: ஹிண்டன்பர்க் அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 13, 2024
    10:20 am

    செய்தி முன்னோட்டம்

    சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அதானி குழுமத்தின் மீதான விசாரணையில் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளில், $310 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தத் தகவலை அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச், செப்டம்பர் 12 அன்று ஒரு சமூக ஊடக இடுகையில் வெளியிட்டது.

    இந்த விசாரணையில், இந்திய பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி மற்றும் பத்திரங்களை மோசடி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கும்.

    இதன் வேர்கள் 2021 இல் தொடங்குகிறது.

    முன் ஆய்வு

    அதானி குழுமத்தின் மீதான விசாரணையை சுவிஸ் ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன

    ஹிண்டன்பர்க் ரிசர்ச், சுவிஸ் ஊடகமான கோதம் சிட்டியின் அறிக்கையை குறிப்பிட்டது.

    இது அதானி குழுமத்தின் தவறான நடத்தை குறித்து விசாரணைக்கு ஃபெடரல் கிரிமினல் கோர்ட் (FCC) உத்தரவிட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

    ஹிண்டன்பேர்க் ரிசர்ச் அதன் முதல் குற்றச்சாட்டை குழுமத்திற்கு எதிராக முன்வைப்பதற்கு முன்பு ஜெனீவா அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

    பில்லியனர் கவுதம் அதானியுடன் தொடர்புடைய முன்னணி நபருக்கு சொந்தமானது என்று கூறப்படும் $310 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஆறு சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.

    வழக்கு பரிமாற்றம்

    சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையை எடுத்துக்கொள்கிறது

    இந்த வழக்கு ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (OAG) ஜெனீவாவின் அரசு வழக்கறிஞரின் விசாரணையின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது.

    முதன்மையாக அதானி குழுமத்தின் பங்குகளை வைத்திருக்கும் "opaque BVI/Mauritius & Bermuda funds" இந்த முன்னணி நபர் முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த உரிமைகோரல் சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட நீதிமன்ற பதிவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் உள்ளூர் சுவிஸ் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஹிண்டன்பர்க்கின் இடுகை

    Swiss authorities have frozen more than $310 million in funds across multiple Swiss bank accounts as part of a money laundering and securities forgery investigation into Adani, dating back as early as 2021.

    Prosecutors detailed how an Adani frontman invested in opaque…

    — Hindenburg Research (@HindenburgRes) September 12, 2024

    பதில்

    குற்றசாட்டுகளை மறுக்கும் அதானி குழுமம்

    இந்த குற்றசாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளது அதானி குழுமம். அது வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில்,"எந்தவொரு சுவிஸ் நீதிமன்ற நடவடிக்கைகளிலும் எந்தவொரு தொடர்பும் இல்லை அல்லது எங்கள் எந்தவொரு நிறுவனக் கணக்குகளும் எந்தவொரு அதிகாரத்தினாலும் முடக்கப்படவில்ல" என்று தெரிவித்தது.

    "மேலும், கூறப்படும் உத்தரவில் கூட, சுவிஸ் நீதிமன்றம் எங்கள் குழு நிறுவனங்களைக் குறிப்பிடவில்லை அல்லது அத்தகைய அதிகாரம் அல்லது ஒழுங்குமுறை அமைப்பிடமிருந்து தெளிவுபடுத்தல் அல்லது தகவலுக்கான கோரிக்கைகளை நாங்கள் பெறவில்லை. எங்கள் வெளிநாட்டு ஹோல்டிங் அமைப்பு வெளிப்படையானது, முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது மற்றும் தொடர்புடைய அனைத்து சட்டங்களுக்கும் இணங்குகிறது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    மறுக்கும் அதானி குழுமம்

    . @AdaniOnline REJECTS your allegations 👇🏻👇🏻👇🏻

    “We unequivocally reject and deny the baseless allegations presented. The Adani Group has no involvement in any Swiss court proceedings, nor have any of our company accounts been subject to sequestration by any authority” pic.twitter.com/VmhAz4PdTK

    — PallaviCT (@pallavict) September 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதானி

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    அதானி

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் பங்குச் சந்தை
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025