சீனாவுடனான எல்லை மோதல்; 75% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வியாழன் (செப்டம்பர் 12) அன்று, சீனாவுடனான சமீபத்திய எல்லை மோதலில் தோராயமாக 75 சதவிகிதம் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் எல்லை மோதல் பிரச்சினையில், எல்லையில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கல் தான் பெரிய பிரச்சினை என்பதை ஜெய்சங்கர் அடிக்கோடிட்டுக் காட்டினார். சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர் அங்குள்ள ஒரு சிந்தனைக் குழுவில் அமர்வில் பேசியபோது, ஜூன் 2020இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்கள் இந்தியா-சீனா உறவுகளை முழுமையாக பாதித்தது என்றார். பிரச்சினைக்கு தீர்வு காண இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.
இராணுவமயமாக்கல் பெரிய பிரச்சினை: ஜெய்சங்கர்
எல்லையில் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்தாலும், நாங்கள் இருவருமே படைகளை நெருக்கமாக கொண்டு வந்ததில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது என்றும், அந்த வகையில் எல்லையில் இராணுவமயமாக்கல் உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட்டால் உறவை மேம்படுத்த முடியும் என ஜெய்சங்கர் மேலும் கூறினார். விரிவான இராஜதந்திர மற்றும் இராணுவப் பேச்சுக்களைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பல பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்கியபோதும், கிழக்கு லடாக்கில் சில உராய்வு புள்ளிகளில் இந்திய மற்றும் சீனத் துருப்புக்கள் அருகருகே நிறுத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவும் வரை சீனாவுடனான உறவு சாதாரணமாக இருக்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.