05 Jul 2024

NCW தலைவரை இழிவாக பேசிய TMC MP மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக மகளிர் ஆணையம் புகார்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவி ரேகா ஷர்மா குறித்து இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு யுஏ சான்றிதழ்; ரன்னிங் டைம் தெரியுமா?

ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான இந்தியன் 2 க்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) உ/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

கோலாகலமாக துவங்குகிறது TNPL சீசன் 8: எங்கே பார்க்கலாம்?

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது.

தென்கொரியாவில் வேலை பளு தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ரோபோ

தென் கொரியாவின் குமி நகர சபையில், அரசு பணிக்காக நியமிக்கப்பட்ட ஒரு ரோபோ அரசு ஊழியரின் வீழ்ச்சி, நாட்டின் முதல் "ரோபோ தற்கொலை" என்று பலர் அழைக்கும் ஒரு தேசிய விவாதத்தை தற்போது தூண்டியுள்ளது.

இங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள்

"இது மாற்றத்திற்கான நேரம்" என்ற முழக்கத்தின் பின்னால் அணிவகுத்து, UKல் லேபர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

'தால்-சாவல்' ஃபண்டுகள் என்றால் என்ன, நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று எடெல்வீஸ் தலைவர் கூறுகிறார் 

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது உணர்ச்சிகளால் குழப்பமடைந்து தவறான முதலீடுகளைச் செய்பவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் எடெல்வீஸ் நிறுவனத்தின் எம்டி, சிஇஓ ராதிகா குப்தா.

பிரயாக்ராஜ் பள்ளியில், புதிய மற்றும் பழைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குள் நடைபெற்ற நாற்காலி சண்டை

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நாற்காலிக்காக இருவர் அடித்துக்கொண்டு சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராணுவத்தின் உற்பத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து இந்தியப் பாதுகாப்புப் பங்குகள் 13% உயர்ந்துள்ளன

இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை கண்டுள்ளன. குறிப்பிட்ட சில பங்குகள் ஜூலை 5 அன்று 13% வரை அதிகரித்தன.

கொலஸ்ட்ராலுக்கான முதல் டெஸ்ட்-ஐ 18 வயதிலேயே எடுக்கவேண்டும் என மத்திய அரசின் ஆய்வு தெரிவிக்கிறது

'சைலன்ட் கில்லர்' என்று கூறப்படும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 11: நீட் முறைகேடுகளுக்கு நடுவே, NEET PG 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வு ரத்து குறித்து மாநில அரசுகள் தீர்மானத்தை நிறைவேற்றி வரும் நிலையில், முதுகலை (NEET PG) 2024 தேர்வுக்கான புதிய தேதியை மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) அறிவித்துள்ளது.

மாணவர்களே! உங்களுக்காக இஸ்ரோவின் பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்; பங்கேற்பது எப்படி?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 தேசிய விண்வெளி தினத்தின் ஒரு பகுதியாக பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊட்டியின் பிரபலமான 52.4 ஏக்கர் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்

ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த ரேஸ் கோர்ஸிற்கு இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

10 டவ்னிங் ஸ்ட்ரீட்: ரிஷி சுனக் எப்போது தனது அரசாங்க இல்லத்திலிருந்து வெளியேறக்கூடும்? 

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக், ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் தேர்தலில் 'சர்' கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான, நம்பர் 10, டவுனிங் ஸ்ட்ரீட்டை விட்டு வெளியேறுவார்.

கைலாசா எங்கிருக்கிறது என ஜூலை 21 தெரிவிக்கவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு

பாலியல் வழக்கு உட்பட பல வழக்குகளில் சிக்கி, புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா, இந்திய எல்லையை தாண்டி தனக்கென்று ஒரு நாட்டை உருவாகியுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார்.

ஹேக்கர்களால் திருடப்பட்ட சுமார் 10 பில்லியன் பாஸ்வோர்ட்கள்; உங்கள் பாஸ்வோர்ட் சேஃப்-ஆ? 

சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஹேக்கிங்கில் கிட்டத்தட்ட 10 பில்லியன் இணைய பயனர்களின் பாஸ்வோர்ட் களவாடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி? 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்டின் சமீபத்திய பணிநீக்கம் ப்ராடக்ட் டீம்களை தாக்கியுள்ளது

மைக்ரோசாப்ட் இந்த வாரம் நிறுவனம் முழுவதும் பல்வேறு டீம்கள் மற்றும் இடங்களைப் பாதிக்கும் புதிய சுற்று பணிநீக்கங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

மகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில், தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்பட்டுவருகிறது.

வான்கடே மைதானத்தில் 'வந்தே மாதரம்' என பாடிய உலகக்கோப்பை வென்ற இந்திய அணி; வைரலாகும் வீடியோ 

நேற்று பிசிசிஐ சார்பில் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு, மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்; சீறி எழுந்த சமந்தா

நடிகை சமந்தா, வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது.

ஹத்ராஸ்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராகுல் காந்தி

ஜூலை 2 ஆம் தேதி ஹத்ராஸில் நடந்த ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்தனர்.

உலகின் முதல் CNG பைக் இன்று அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்?

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன ஏற்றுமதி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG மோட்டார் சைக்கிளை இன்று அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படவுள்ளது

ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களின் சோதனைத் தயாரிப்பை, இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.

04 Jul 2024

மூலதன நெருக்கடி காரணமாக இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடு நிறுத்தமா?

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், இந்திய அதிகாரிகளுடனான தொடர்பை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

DPDP சட்டம்:சமூக ஊடக தளங்கள் கவலைகொள்ளும் இந்தியாவின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?

மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டத்திற்கான வரைவு விதிகளை உருவாக்கி வரும் இந்த நேரத்தில், ​​சமூக ஊடக தளங்கள் குறிப்பிடத்தக்க கவலைகளை வெளிப்படுத்துகின்றன.

இப்போது வாட்ஸ்அப்பில் நீங்களே AI உருவத்தை உருவாக்கலாம்

பயனர்கள் தாங்களாகவே செயற்கை நுண்ணறிவு-உருவாக்கிய படங்களை உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் செய்து வருகிறது.

ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு 

நிலமோசடி வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்-ஐ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்ததை அடுத்து, இன்று மாலை ஜார்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றார்.

ஹத்ராஸ்: 6 பேர் கைது, முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

கடந்தது செவ்வாய்க்கிழமை ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வரி விலக்கு கட்டாயமா? பட்ஜெட் 2024க்கு ஏன் நிலையான விலக்கு உயர்வு தேவை

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UAEஇல் செயல்பாட்டிற்கு வந்த UPI கட்டண முறை: இது எவ்வாறு செயல்படுகிறது?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முழுவதும் QR குறியீடு அடிப்படையிலான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) கட்டணங்களை செயல்படுத்த, NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL), நெட்வொர்க் இன்டர்நேஷனலுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

தவறாகி போன கேட்ராக்ட் அறுவை சிகிச்சை: 25 நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக புகார்

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள மெட்யாப்ரூஸில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குறைந்தது 25 நோயாளிகள் தங்கள் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளனர்.

சமஸ்கிருத ஸ்லோகம், காளியின் ஒன்பது அவதாரங்கள்: மாமேரு நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை பற்றி சில தகவல்கள்

முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் நேற்று நடைபெற்ற மாமேரு நிகழ்ச்சியில் அணிந்திருந்த லெஹெங்கா பற்றி தான் தற்போது ஊரெல்லாம் பேச்சு.

சீனாவின் SHEIN-ஐ இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரும் ரிலையன்ஸ்

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், பிரபல சீன ஃபேஷன் லேபிள் ஷீனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

சலிப்பூட்டும் வாட்ஸ்அப் டெக்ஸ்ட் சாட்களுக்கு இனி குட்பை: வந்துவிட்டது புதிய வீடியோ நோட்ஸ்

சாட்களில் வீடியோ உள்ளடக்கப் பகிர்வை எளிதாக்க, 'வீடியோ நோட்' எனப்படும் புதிய கேமரா பயன்முறையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச விருது வென்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சர்வதேச விருதை வென்றுள்ளது.

இங்கிலாந்து பொதுத் தேர்தல்கள் ஏன் எப்போதும் வியாழக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன 

UK பிரதம மந்திரி ரிஷி சுனக் மே மாதம் திடீர் தேர்தலை அறிவித்ததையடுத்து, 2019க்குப் பிறகு முதல் பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய இராச்சிய வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 'சங்கீத்' விழாவில் பாடுவதற்காக மும்பை வந்திறங்கிய பாப் பாடகர்

சர்வதேச பாப் இசை பிரபலம் ஜஸ்டின் பீபர் மும்பையில் வந்திறங்கியுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய சங்கீத் விழாவில் பங்கேற்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்செக்ஸ்: 80,300க்கு புள்ளிகளை தொட்டு புதிய சாதனை உச்சத்தை எட்டியது

S&P BSE 30 பங்கு பெஞ்ச்மார்க் குறியீடு, சென்செக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வியாழன் காலை 80,300 க்கும் அதிகமான உச்சத்தில் திறக்கப்பட்டது.

ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா'

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த சத்சங்கத்தில் 121 பேர் கூட்ட நெரிசலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அந்த மத போதகர், "போலே பாபா", தன்னை பின்பற்றுபவர்களுக்கு "மந்திர சக்திகள்" கொண்ட "குணப்படுத்துபவர்" மற்றும் "பேயோட்டுபவர்" போன்ற சித்து வேலைகளுக்கு அறியப்படுபவர்.

ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது

ஹைதராபாத்தில் ஒரு பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து தந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரியல் எஸ்டேட் விற்பனையாளரும் அவரது உதவியாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை 

லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவின் வரம்புக்குக் கீழே உள்ள காற்று மாசுபாட்டின் அளவு, நாட்டின் பத்து நகரங்களில் ஆண்டுதோறும் ஏற்படும் சுமார் 33,000 இறப்புகளுக்குக் காரணம் என்று கூறுகிறது.

இன்று இங்கிலாந்து பொது தேர்தல்: ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்து அரசியலை மறுவடிவமைக்கக்கூடிய முக்கிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

கனடா வரலாற்றில் முதல்முறையாக ஆயுதப்படைக்கு தலைமை தாங்கும் ஒரு சிங்க பெண்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், மூத்த பணிகளுக்கு பெண்களை நியமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதல் முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ வீரராக அறிவித்துள்ளார்.

அக்னிவீர் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தியின் குற்றசாட்டையடுத்து இந்திய ராணுவம் விளக்கம்

அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்று நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகப் பதிவில் கூறியதை அடுத்து இந்திய ராணுவத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி டெல்லி வந்தடைந்தது; பிரதமரை சந்திக்கவுள்ளனர்

இந்திய கிரிக்கெட் அணியினர் வியாழக்கிழமை காலை பார்படாஸில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா; ஹேமந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் புதன்கிழமை மாலை ராஞ்சியில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.