NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஏர்டெல் மற்றும் ஜியோவின் ப்ரீபெய்ட் பயனர்கள் அதிக கட்டணங்களை எவ்வாறு தவிர்க்கலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர்டெல் மற்றும் ஜியோவின் ப்ரீபெய்ட் பயனர்கள் அதிக கட்டணங்களை எவ்வாறு தவிர்க்கலாம்
    இது ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வர உள்ளது

    ஏர்டெல் மற்றும் ஜியோவின் ப்ரீபெய்ட் பயனர்கள் அதிக கட்டணங்களை எவ்வாறு தவிர்க்கலாம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 02, 2024
    08:16 am

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் திட்டங்களுக்கான விலை உயர்வை சமீபத்தில் அறிவித்துள்ளன.

    இது ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    போஸ்ட்பெய்டு பயனர்கள் தப்பிக்க முடியாது என்றாலும், முன்கூட்டியே ரீசார்ஜ்களை திட்டமிடுவதன் மூலம், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பல மாதங்களுக்கு விலை உயர்வைத் தவிர்க்கலாம்.

    ஜியோவிற்கு 12-25% மற்றும் ஏர்டெல்லுக்கு 11-21% வரை கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதால், இந்த தீர்வு மிகவும் கவர்ச்சிகரமானதாகிறது.

    விலை உத்தி

    தற்போதைய விலையைத் தக்கவைக்க முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யவும்

    ஜூலை 3க்கு முன் செய்யப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள், திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டாலும் அல்லது அதிகரிக்கப்பட்டாலும், அவற்றின் தற்போதைய விலைகளைத் தக்க வைத்துக் கொள்ளும்.

    இது சேமிப்பிற்கான, குறிப்பாக நீண்ட கால திட்டங்களில் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

    ஜூலை 3ஆம் தேதிக்கு முன்னர் விரும்பிய காலத்திற்கு ரீசார்ஜ்களை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், இந்த ரீசார்ஜ்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும், இதன் மூலம் திட்டங்களின் கட்டண உயர்வு தவிர்க்கப்படும்.

    ரீசார்ஜ் வரிசை

    சந்தாதாரர்கள் வரிசையில் ரீசார்ஜ் செய்யலாம்

    ஜியோ அதன் சந்தாதாரர்களை க்யூவில் மாதாந்திர அல்லது வருடாந்திர அடிப்படையில் 50 ரீசார்ஜ்கள் வரை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    இருப்பினும், ஏர்டெல் சந்தாதாரர்கள் இதுபோல முன்னதாவே க்யூவில் செய்துகொள்ளக்கூடிய ரீசார்ஜ்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

    இந்த ரீசார்ஜ் க்யூ விருப்பம் ஜியோ மற்றும் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமானது.

    ஏனெனில் Vodafone Idea (Vi) பயனர்கள் தங்கள் ரீசார்ஜ்களை முன்கூட்டியே திட்டமிடும் வசதி இல்லை.

    டேட்டா சலுகைகள்

    வரம்பற்ற 5G டேட்டா சலுகைகளில் மாற்றங்கள்

    ஏர்டெல் அதன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றாலும், ஜியோ தனது அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையைப் பெறுவதற்கான தேவைகளை புதுப்பித்துள்ளது.

    இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டாவைப் பெற, ஜியோ பயனர்கள் இப்போது தினசரி 2ஜிபி டேட்டா அல்லது அதற்கு மேல் வழங்கும் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

    போஸ்ட்பெய்டு பயனர்கள், துரதிர்ஷ்டவசமாக, விலை உயர்வைத் தவிர்ப்பதற்கான தீர்வு எதுவும் இல்லை.

    ஆனால் அவர்களின் டேட்டா பயன்பாடு அனுமதித்தால், அடுத்த பில்லிங் சுழற்சிக்கான குறைந்த திட்டத்திற்குச் செல்வதை அவர்கள் பரிசீலிக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர்டெல்
    ஜியோ

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஏர்டெல்

    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் தொழில்நுட்பம்
    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? 5ஜி தொழில்நுட்பம்
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ

    ஜியோ

    ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டம் - இலவச சலுகைகள் என்ன? மொபைல் ஆப்ஸ்
    குடும்பங்களுக்காக ஜியோவின் Jio Plus திட்டம் அறிமுகம்! சலுகைகள் என்ன? தொழில்நுட்பம்
    ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்! தொழில்நுட்பம்
    கட்டண சேவையாகும் Jio Cinema: இனி இலவசம் இல்லை ஓடிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025