NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்று முதல் உயரும் ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள்: புதிய திட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று முதல் உயரும் ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள்: புதிய திட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை 
    ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் இருவரையும் பாதிக்கிறது

    இன்று முதல் உயரும் ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள்: புதிய திட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 03, 2024
    01:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தங்களது டேட்டா பேக்குகளின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருவதால், நாடு முழுவதும் உள்ள ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் இருவரையும் பாதிக்கிறது.

    விலை உயர்வு இருந்தபோதிலும், நிறுவனங்கள் தங்கள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்களைத் தொடர்ந்து வழங்கும்.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றின் விலை உயர்வு சில திட்டங்களுக்கு 25% அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் தங்கள் ரீசார்ஜ் பேக்குகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

    திருத்தப்பட்ட விகிதங்கள்

    ஏர்டெல் பிரபலமான திட்டங்களுக்கு புதிய விலைகளை அறிமுகப்படுத்துகிறது

    ஏர்டெல் அதன் பிரபலமான திட்டங்களின் விலைகளை மேம்படுத்திய சேவை சலுகைகளுடன் மலிவு விலையை சமநிலைப்படுத்தும் முயற்சியில் திருத்தியுள்ளது.

    1ஜிபி/நாள் (28 நாட்கள்) திட்டம், ₹265ல் இருந்து இப்போது ₹299 அதிகரித்துள்ளது.

    இது தற்போது 1.5ஜிபி/நாள் (28 நாட்கள்) சேவையை வழங்குகிறது. அதேபோல திட்டம் ₹299ல் இருந்து ₹349 ஆக அதிகரித்துள்ளது.

    நீண்ட கால திட்டங்களும் விலை உயர்வைக் கண்டுள்ளன.

    1.5ஜிபி/நாள் (84 நாட்கள்) திட்டம் இப்போது ₹859 எனவும் மற்றும் வருடாந்திர 2.5ஜிபி/நாள் (365 நாட்கள்) திட்டம் ₹2,999ல் இருந்து ₹3,599க்கு கிடைக்கிறது.

    விலை மாற்றங்கள்

    ரிலையன்ஸ் ஜியோவின் திட்டங்கள்

    ரிலையன்ஸ் ஜியோ தனது விலைக் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இரண்டு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வைக் கண்டுள்ளது.

    முன்பு ₹1,559 விலையில் இருந்த திட்டம் இப்போது ₹1,899க்கு வழங்கப்படுகிறது.

    மேலும் ₹2,999 விலையில் ₹3,599க்கு விற்கப்படுகிறது. மற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களில் 2ஜிபி/நாள் (28 நாட்கள்) திட்டம் இப்போது ₹349 மற்றும் 1.5ஜிபி/நாள் (28 நாட்கள்) திட்டம் ₹299 ஆக அதிகரித்துள்ளது.

    வருடாந்திர 2.5ஜிபி/நாள் (365 நாட்கள்) திட்டமானது முந்தைய ₹2,999 இலிருந்து ₹3,599 ஆக அதிகரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜியோ
    ஏர்டெல்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஜியோ

    குடும்பங்களுக்காக ஜியோவின் Jio Plus திட்டம் அறிமுகம்! சலுகைகள் என்ன? தொழில்நுட்பம்
    ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்! தொழில்நுட்பம்
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஏர்டெல்

    ஏர்டெல்

    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் தொழில்நுட்பம்
    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? 5ஜி தொழில்நுட்பம்
    5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே! தொழில்நுட்பம்
    அன்லிமிடெட் 5G சேவை வழங்கும் ஏர்டெல்லின் புதிய பிளான்கள்!  மொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025