புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டது WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் மருந்துகள் ஆகியற்றை சேர்ந்து உபயோகித்தால், புகைப்பழக்கத்தை கைவிட முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. சிகரெட், வாட்டர் பைப்புகள், புகையிலை புகையிலை, சுருட்டுகள், ரோல் புகையிலை மற்றும் சூடான புகையிலை பொருட்கள்(HTPs) உள்ளிட்ட பல்வேறு புகையிலை பொருட்களை பயன்படுத்தும் 750 மில்லியனுக்கும் அதிகமான புகையிலை பயனர்களுக்கான பரிந்துரைகள் இந்த வழிகாட்டுதல்களில் வழங்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு இந்த சேவையை விலை இல்லாமல் வழங்க வேண்டும்
உலகில் உள்ள 1.25 பில்லியன் புகையிலை பயனர்களில் 60% க்கும் அதிகமானோர் அந்த பழக்கத்தில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். ஆனால், அப்படி விரும்புபவர்களில் 70% பேருக்கு தேவையான ஆதரவு கிடைப்பதில்லை என்று WHO கூறியுள்ளது. "புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கான போராட்டம் மிக தீவிரமானது. இந்த பழக்கத்தால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்," என்று WHO கூறியுள்ளது. மறுவாழ்வு மையங்களில் சேர்வதுடன் புகை பழக்கத்தை கைவிட உதவும் மருந்துகளை எடுத்துக்கொள்வது சீக்கிரத்தில் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் என்று அது கூறியுள்ளது. மேலும், உலக நாடுகள், மக்களுக்கு இந்த சேவையை குறைந்த விலையில் அல்லது வில்லை இல்லாமல் வழங்க வேண்டும் என்று அது கூறி இருக்கிறது.