Page Loader
உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jul 02, 2024
04:39 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இன்று நடந்த மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்புகளை உறுதிப்படுத்திய தலைமை மருத்துவ அதிகாரி ராஜ்குமார் அகர்வால், "எங்களுக்கு இதுவரை 27 உடல்கள் கிடைத்துள்ளன" என்று கூறினார். இன்று ரதிபன்பூரில் உள்ள சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிவடையும் போது, ​​கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். இதனையடுத்து, மொத்தம் 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் எட்டா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா 

23 பெண்கள், 3 குழந்தைகள் பலி

மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறிய அவர், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் ஆணையர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 23 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் 1 ஆணின் சடலங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.