Page Loader
இன்று வரலக்ஷ்மி சரத்குமார்- நிக்கோலாய் திருமணம் நடைபெறவுள்ளது
இவர்களது திருமணப் படங்கள் ஜூலை 4ஆம் தேதி பகிரப்படும்

இன்று வரலக்ஷ்மி சரத்குமார்- நிக்கோலாய் திருமணம் நடைபெறவுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2024
11:50 am

செய்தி முன்னோட்டம்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும், இன்று ஜூலை-3ஆம் தேதி மாலையில் திருமணம் நடைபெறவுள்ளது. வரலட்சுமியும், மூத்த நடிகர் சரத்குமாரும் இந்த திருமணம் குறித்த திருமணத்தை அறிக்கையை பகிர்ந்து கொண்டனர். இவர்களது திருமணப் படங்கள் ஜூலை 4ஆம் தேதி பகிரப்படும் என ஊடகத்துறையினருக்கும் தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்களுடன் தாய்லாந்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் சென்னையில் நடைபெற்றது. ஜூன் 30ஆம் தேதி மெஹந்தி விழா மற்றும் சங்கீத் உடன் தொடங்கிய கொண்டாட்டங்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது. முன்னதாக நேற்று சரத்குமார் தனது மகள் வரலட்சுமி திருமணம் ஜூலை 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

வரவேற்பு

சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி

அந்த அறிக்கையில் நேரமின்மை காரணமாக தங்களை நேரில் அழைக்க முடியாமல் போனதற்கு ஊடகங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு முழு குடும்பத்துடன் மீடியாவை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த கலைக் கலைஞர் நிக்கோலாய் சச்தேவுக்கும் மார்ச் 1ஆம் தேதி குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஜோடி 14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், சமீபத்தில் தான் அவர்கள் காதல் வயப்பட்டதாக வரலக்ஷ்மி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். திருமணத்திற்கு பின் ஒரு பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்கின்றனர்.