Page Loader
41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி

41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி

எழுதியவர் Sindhuja SM
Jul 03, 2024
01:55 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆஸ்திரியா செல்கிறார். இதனையடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் முதல் இந்தியத் பிரதமர் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. முதலில் ரஷ்யா செல்ல உள்ள பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா செல்கிறார். கடைசியாக 1983 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆஸ்திரியாவிற்கு பயணம் செய்தார். 1955ல் ஆஸ்திரியா சென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்தியத் பிரதமர் என்ற பெயரை எடுத்தார். நவம்பர் 1999 இல், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் ஆஸ்திரியாவுக்கு முதல்முறையாக இந்தியா சார்பாக அரசுப் பயணம் மேற்கொண்டார்

இந்தியா-ஆஸ்திரியா 

 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட 'இந்தியா-ஆஸ்திரியா ஸ்டார்ட்அப் பாலம்' 

அதன் பிறகு 2011 இல் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அந்நாட்டுக்குப் பயணம் செய்தார். மோடியின் வியன்னா பயணம், அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் தொழில்முனைவோரை வளர்ப்பதற்காக இந்த ஆண்டு பிப்ரவரியில் 'இந்தியா-ஆஸ்திரியா ஸ்டார்ட்அப் பாலம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதை முன்னெடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக மோடி ஆஸ்திரியா செல்கிறார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து, மோடி ஆஸ்திரியாவுடன் நல்லுறவை பேணி வருகிறார். முதல் முறையாக, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜூன் 2, 2017அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில், அப்போதைய ஆஸ்திரிய அதிபர் கிறிஸ்டியன் கெர்னுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.