பராம்பரிய குஜராத்தி முறைப்படி துவங்கிய ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண கொண்டாட்டம்
முகேஷ் அம்பானி-நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்தின் முக்கிய விழாக்கள் ஜூலை 12 அன்று ஷுப் விவா விழாவுடன் தொடங்கும். இந்த விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய ஆடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜூலை 13 ஆம் தேதி ஷுப் ஆஷிர்வாத் என்ற நிகழ்ச்சியும், ஜூலை 14 ஆம் தேதி மங்கள் உத்சவ், திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும். அதோடு ஆனந்த் அம்பானியின் திருமண விழாக்கள் நிறைவடையும். இந்த நிலையில் பாரம்பரிய குஜராத்தி முறைப்படி இன்று மாமேரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணமகளின் தாய் மாமனும், மணமகனின் அத்தையும் அவர்களுக்கு புடவை, நகை மற்றும் பரிசு பொருட்களை வழங்குவார்கள்.