NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை
    கிழிந்த ஜீன்ஸ், டி-ஷர்ட்கள், உடல் பாகங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் மற்றும் ஜெர்சிகளுக்கு தடை

    ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 02, 2024
    04:31 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையின் செம்பூரில் உள்ள ஆச்சார்யா & மராத்தே கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்களை தடை செய்யும் புதிய டிரஸ் கோட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

    திங்கள்கிழமை இந்த ஆடைகளை அணிந்ததற்காக மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டது போது தான் இந்த அறிவிப்பு பற்றி மாணவர்களுக்கு தெரியவந்தது எனக்கூறப்படுகிறது.

    முன்னதாக ஹிஜாப்கள் மற்றும் பிற மதச் சின்னங்களுக்கு கல்லூரியின் தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பம்பாய் உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    டிரஸ் கோட் விவரங்கள்

    கல்லூரி அறிவிப்பு புதிய டிரஸ் கோட் விதிமுறைகளை விவரிக்கிறது

    ஜூன் 27 தேதியிட்ட கல்லூரி அறிவிப்பில், புதிய டிரஸ் கோட் படி, கிழிந்த ஜீன்ஸ், டி-ஷர்ட்கள், உடல் பாகங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் மற்றும் ஜெர்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தலைமையாசிரியர் டாக்டர் வித்யாகௌரி லெலே கையொப்பமிட்ட இந்த நோட்டீசில் மாணவர்கள் வளாகத்தில் முறையான உடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆண்கள் பேண்ட்களுடன் அரைக்கை அல்லது முழுக்கை சட்டைகளை அணியலாம் என்றும், பெண்கள் எந்த இந்திய அல்லது மேற்கத்திய ஆடைகளையும் தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும், மத அல்லது கலாச்சார வேறுபாட்டைக் காட்டும் ஆடைகள் அனுமதிக்கப்படாது.

    தயாரிப்பு

    புதிய டிரஸ் கோட், மாணவர்களை கார்ப்பரேட் உலகிற்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

    கார்ப்பரேட் உலகிற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த புதிய ஆடைக் கட்டுப்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் உறுதிபடக் கூறுகிறது.

    இது பற்றி தலைமையாசிரியர் டாக்டர் லெலே, "மாணவர்கள் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" எனக்கூறினார்.

    கல்லூரி சீருடை எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை, ஆனால் மாணவர்கள் நாகரீகமான இந்திய அல்லது மேற்கத்திய ஆடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கல்லூரி
    கல்லூரி மாணவர்கள்
    மும்பை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி

    கல்லூரி மாணவர்கள்

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை

    மும்பை

    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை ரிசர்வ் வங்கி
    ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அயோத்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025