
இந்திய அணி இன்று பார்படாஸில் இருந்து புறப்படுகிறது! நாளை இரவு டெல்லியில் தரையிறங்கும் எனத்தகவல்
செய்தி முன்னோட்டம்
பெரில் சூறாவளி கரையை கடப்பதைத்தொடர்ந்து, டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இன்று, ஜூலை 2ஆம் தேதி பார்படாஸிலிருந்து புறப்படுகிறது.
அணி வீரர்களும், பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உடன், BCCI ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் பார்படாஸில் இருந்து புறப்படவுள்ளது.
கடந்த சனிக்கிழமை தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா, பெரில் சூறாவளி காரணமாக 3 நாட்களாக அங்கேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதால், அணி ஹோட்டல் அறையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான், இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு அணி, பார்படாஸிலிருந்து புறப்படவுள்ளது.
அவர்கள் ஜூலை 3, இரவு 7:45 மணிக்கு டெல்லியில் தரையிறங்கக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய அணி இன்று பார்படாஸில் இருந்து புறப்படுகிறது!
The Indian team is all set to fly out of Barbados on Tuesday, July 2 on a special flight arranged by the BCCI and will land in Delhi on Wednesday.#T20worldcup2024 #TeamIndia #Barbadoshttps://t.co/X1P78hQCUE pic.twitter.com/R9rsQEtnL3
— MSN India (@msnindia) July 2, 2024