Page Loader
"சம்பளம் வேண்டாம்": ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

"சம்பளம் வேண்டாம்": ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

எழுதியவர் Sindhuja SM
Jul 03, 2024
10:37 am

செய்தி முன்னோட்டம்

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், ஆந்திர மாநிலத்தின் ஆபத்தான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது சம்பளத்தையும் தனது அலுவலகத்திற்கான சிறப்பு நிதிகளையும் ஏற்க மறுத்துவிட்டார். ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது சம்பளத்தை வாங்க போவதில்லை என முடிவு செய்துள்ளார். கொல்லப்ரோலுவில் நடந்த நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பேசும் போது அவர் இதனை தெரிவித்தார். பிதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கொல்லப்ரோலு நகரில் பவன் கல்யாண் திங்கள்கிழமை காலை பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினார். அப்போது, பஞ்சாயத்து ராஜ் துறைக்கு வழங்கப்பட்ட நிதியை முந்தைய அரசு தவறாக ஒதுக்கியதாக பவன் விமர்சித்தார். "ருஷிகொண்டா அரண்மனைக்கு கோடிக்கணக்கில் செலவழிப்பதற்கு பதிலாக, அந்த நிதியை கிராமங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியிருக்கலாம்," என்றும் அவர் கூறினார்.

ஆந்திரா 

'துறை கடனில் இருக்கும் போது சம்பளம் வாங்குவது சரியல்ல': பவன் 

தளபாடங்களை பழுதுபார்க்குமாறு தனது முகாம் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தன்னிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு தான் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். "எனது சம்பளக் கையெழுத்துக்காகச் செயலக அதிகாரிகள் என்னிடம் வந்தபோது, ​​என்னால் கையெழுத்திட முடியவில்லை. ஆரம்பத்தில் சம்பளம் வாங்கி வேலை செய்யத் திட்டமிட்டேன். இருப்பினும், பஞ்சாயத்து ராஜ்க்கு இப்போது நிதி இல்லை, அது கடுமையான கடனில் உள்ளது," என்று பவன் கூறியுள்ளார். "ஒவ்வொரு துறையின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. இந்த பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும். துறை கடனில் இருக்கும் போது சம்பளம் வாங்குவது சரியல்ல என்று உணர்ந்தேன். அதனால், நான் சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டேன். நான் எனது தாய்நாட்டிற்காக பாடுபடுவேன் என்று அவர்களிடம் கூறினேன்" என்று அவர் கூறியுள்ளார்.