Page Loader
வெகுஜன திருமணம்: மணமக்களுக்கு தங்கம், பணம், வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கிய அம்பானி
50 ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர் அம்பானி குடும்பத்தினர்

வெகுஜன திருமணம்: மணமக்களுக்கு தங்கம், பணம், வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கிய அம்பானி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2024
11:20 am

செய்தி முன்னோட்டம்

ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று 50 ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர் அம்பானி குடும்பத்தினர். இந்த நிகழ்ச்சி நீட்டா மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் தலைமையில், மும்பையின் தானேயில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஜோடிக்கும் தங்க நகைகள் மற்றும் ₹1 லட்சம் ரொக்கப் பரிசாக அம்பானிகள் வழங்கினர்.

நன்கொடைகள்

1 லட்சம் பணத்துடன் 36 வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது

ஒவ்வொரு ஜோடிக்கும் அம்பானிகள் தாலி, திருமண மோதிரங்கள் மற்றும் மூக்குத்தி உள்ளிட்ட தங்க நகைகளை பரிசாக அளித்தனர். வெள்ளி ஆபரணங்களான மெட்டி மற்றும் கொலுசுகளையும் பரிசாக வழங்கினர். நகைகளைத் தாண்டி, புதுமணத் தம்பதிகளுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் ஸ்டவ், மிக்சி, மின்விசிறி, மெத்தை, தலையணைகள் என 36 வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதோடு ஒவ்வொரு மணமகளுக்கும், நீட்டா மற்றும் அவரது மகள் இஷா அம்பானி மூலம் கூடுதலாக ₹1.01 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

வெகுஜன திருமணம்