
கல்கி பட நாயகியின் கையில் 'பிடி' டாட்டூ! பிரபாஸ்-திஷா என்கிறார்கள் இணையவாசிகள்!
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகை திஷா பதானி சமீபத்தில் தனது கையில் "PD" டாட்டூவுடன் காணப்பட்டார்.
இது, 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் நடித்தபோது அவரது சக நடிகர் பிரபாஸுடன் காதல் உறவு ஏற்பட்டிருக்கக்கூடும் என வதந்திகளைத் தூண்டியது.
நடிகையின் சமீபத்திய புகைப்படத்தில் இந்த டாட்டூ தெளிவாக தெரிந்தது.
இதனையடுத்து காதல் கிசுகிசுக்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்தது.
இதனைத்தொடர்ந்து, நேற்று இன்ஸ்டாகிராமில் தனது புதிய டாட்டூவைச் சுற்றியுள்ள ஊகங்களுக்கு திஷா பதானி சூசகமாக பதிலளித்தார்.
தனது டாட்டூ படத்தை வெளியிட்டு,"என் டாட்டூவைச் சுற்றி மிகவும் பலரும் ஆர்வமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்! மகிழ்ச்சி என்ன என்பதைக் கண்டறியவும்! #கிளவுட்னைன்" என்ற சூசகமாக எழுதினார்.
இதனால், இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலிக்கின்றனரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
'PD' டாட்டூ!
Disha Patani's new "PD" tattoo has fans speculating about its meaning. Is it "Prabhas Darling" or simply her initials reversed? Only time will tell! #CelebrityBuzz #DishaPatani #DishaPataniboyfriend #tattoo #Bollywood pic.twitter.com/ggvhVKhwBA
— Scrabbl (@ScrabbIit) July 2, 2024