இரண்டாம் கட்ட தளபதி விஜய் கல்வி விருது விழா இன்று நடைபெறுகிறது
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து பாராட்டி, விருது வழங்கும் விழா இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.
அந்த வகையில் சென்ற வாரம் முதல் கட்டமாக தென்மாவட்டங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 800 மாணவர்களை சந்தித்த விஜய், இரண்டாம் கட்டமாக இன்று மாணவர்களை சந்திக்கவுள்ளார்.
அவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெறவுள்ள இந்த விழாவில், புதுச்சேரி, காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் உள்ள மாணவர்களை சந்திக்கிறார்.
725 மாணவ -மாணவிகள் உட்பட 3,500 பேர் இன்றைய பாராட்டு நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
தளபதி விஜய் கல்வி விருது விழா
#தமிழகவெற்றிக்கழகம் #ThalapathyHonorsStudents
— Athiyaman Balaji (@AthiyamanBalaji) July 3, 2024
#SayNoToDrugs #TVKVijay
pic.twitter.com/qkkWDSwbWk