ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்படுகிறது
செய்தி முன்னோட்டம்
ட்விட்டருக்கு(X தளம்) போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய சமூக ஊடக தளமான 'Koo'வை விற்பதற்கு டெய்லிஹன்ட் நிறுவனத்துடன் கையகப்படுத்தல் விவாதங்கள் நடந்து வந்தன.
இந்நிலையில் அந்த விவாதங்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
டைகர் குளோபல் மற்றும் ஆக்செல் போன்ற முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து $60 மில்லியனுக்கும் அதிகமான நிதி அந்நிறுவனம் பெற்ற போதிலும், 'Koo' அதன் பயனர் தளத்தை விரிவுபடுத்தவும் கடந்த ஆண்டில் வருவாயை ஈட்டவும் போராடியது.
இந்நிலையில், பிற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 'Koo' செயலியை தொடரலாம் என்று அந்த நிறுவனம் நினைத்தது.
இந்தியா
பிற நிறுவனங்களுக்கு விற்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வி
ஆனால், பிற நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகள் விரும்பிய முடிவைக் கொடுக்கவில்லை என்பதை அதன் நிறுவனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், 'Koo' நிறுவனம் 5 பில்லியன் டாலர் நிறுவனமான டெய்லிஹன்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
ஆனால், அந்த விவாதங்கள் ஒப்பந்தத்தில் முடியவில்லை என்று 'Koo' நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடவட்கா ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
பெரிய இணைய நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடன் கூட்டு சேருவதற்கான 'Koo'வின் முயற்சிகள் தோல்வியடைந்தன என்பதை அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் LinkedIn இல் கூறியுள்ளனர்.
பிற நிறுவனங்கள் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை கையாள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.