'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை': முதல்முறையாக நீட் குறித்து கருத்து தெரிவித்த விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை நேரில் சந்தித்து விருதுகள் வழங்கி வருகிறார். முதல் கட்டமாக சென்ற வாரம் 800 மாணவர்களை நேரில் சந்தித்த விஜய், இன்று இரண்டாம் கட்டமாக 19 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய விஜய்,"நான் இன்று எதுவும் பேச வேண்டாம் என்று தான் நினைச்சேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசவில்லை என்றால் அது அவ்வளவு கரெக்டாக இருக்காது என தோணுச்சு. நீங்களே கெஸ் பண்ணி இருப்பிங்க எதைப்பற்றி பேசப்போகிறேன் என்று, எஸ்... நீட், நீட் தேர்வு பற்றி தான்" என்றார்.
நீட் குறித்து விஜய்
#BREAKING | நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்#SunNews | #Vijay | #NEET pic.twitter.com/wXyAQ7TXPG— Sun News (@sunnewstamil) July 3, 2024
நீட் தேர்வு பற்றி முதன்முதலாக மனம் திறந்த விஜய்
"ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற மாதிரி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். மாநில மொழியில் படித்துவிட்டு NCERT சிலபஸில் தேர்வு வைத்தால் எப்படி? அதுவும் கிராமபுரத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்புக்கு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இது எவ்வளவு கடினமான விஷயம்". "நீட் எக்ஸாம் நடந்தது. அதில் சில குளறுபடிகள் எல்லாம் நடந்ததா செய்திகள் எல்லாம் பார்த்தோம். நீட் தேர்வுக்கு மேலே இருக்கின்ற நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய்விட்டது". "சரி இதற்கு என்னதான் தீர்வு, நீட் விலக்குதான் தீர்வு. தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதைச் சீக்கிரமாக சால்வ் பண்ணவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.