
சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா: சிகாகோவை தளமாகக் கொண்ட ஹெல்த் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் குறிவைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித்துறையின் கூற்றுப்படி, வர்கள் சுமார் 1 பில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ. 7500 கோடி) மோசடி செய்த்திருக்கின்றனர்.
38 வயதான ரிஷி ஷா மற்றும் 38 வயதான ஷ்ரதா அகர்வால் ஆகியோர் தான் குற்றச்சாட்டப்பட்ட இந்தியர்கள் ஆவர். 35 வயதான பிராட் பர்டி மீதும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா
ரிஷி ஷாவுக்கு 7.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஜூன் 26 அன்று ரிஷிக்கு ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஷ்ரதாவுக்கு ஜூன் 30 அன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிராட் பர்டிக்கு ஜூன் 30 அன்று இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின்படி, அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவர்களின் அலுவலகங்களில் தொலைக்காட்சித் திரைகள் நிறுவி, வாடிக்கையாளர்களுக்கு அந்த சாதனங்களின் வழியாக விளம்பர இடத்தை ரிஷி ஷாவின் நிறுவனம் விற்றது.
அதன் மூலம், ஷா, அகர்வால் மற்றும் பர்டி ஆகியோர் அவர்களது நிறுவனத்திற்கு சொந்தமில்லாத விளம்பர சரக்குகளை விற்றிருக்கின்றனர்.