ஹத்ராஸ்: செய்தி

08 Jul 2024

இந்தியா

ஹத்ராஸ் நிகழ்வின் போது 15-16 பேர் பக்தர்கள் மீது விஷம் தெளித்ததாக போலே பாபாவின் வழக்கறிஞர் குற்றசாட்டு

ஹத்ராஸில் நடந்த மதக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தலைமறைவான போலே பாபாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த கூட்டத்தின் போது சுமார் 15-16 மர்ம நபர்கள், கூட்டத்தினர் மீது விஷம் தெளித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பாபா தெரிவித்ததாக கூறியுள்ளார்.

ஹத்ராஸ்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராகுல் காந்தி

ஜூலை 2 ஆம் தேதி ஹத்ராஸில் நடந்த ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்தனர்.

04 Jul 2024

கைது

ஹத்ராஸ்: 6 பேர் கைது, முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

கடந்தது செவ்வாய்க்கிழமை ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா'

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த சத்சங்கத்தில் 121 பேர் கூட்ட நெரிசலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அந்த மத போதகர், "போலே பாபா", தன்னை பின்பற்றுபவர்களுக்கு "மந்திர சக்திகள்" கொண்ட "குணப்படுத்துபவர்" மற்றும் "பேயோட்டுபவர்" போன்ற சித்து வேலைகளுக்கு அறியப்படுபவர்.

ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர் 

ஜூன் 2 அன்று, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பலர் மூச்சு முட்டியும், ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டு உதை பட்டு, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 250க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.