NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா'
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா'

    ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா'

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 04, 2024
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த சத்சங்கத்தில் 121 பேர் கூட்ட நெரிசலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அந்த மத போதகர், "போலே பாபா", தன்னை பின்பற்றுபவர்களுக்கு "மந்திர சக்திகள்" கொண்ட "குணப்படுத்துபவர்" மற்றும் "பேயோட்டுபவர்" போன்ற சித்து வேலைகளுக்கு அறியப்படுபவர்.

    இந்தியன் எக்ஸ்பிரஸ்-இன் செய்தியின் படி இந்த பாபா, ஏற்கனவே கடந்த 2000 ஆம் ஆண்டு ஆக்ராவில் இறந்து போன 16 வயது சிறுமியின் உடலை மீட்டு, அவளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறி, சித்து வேலைகள் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    எனினும் பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    இந்த 'மந்திர' பாபா பற்றியும் மற்றும் அவரது வழக்கு பற்றியும் சில தகவல்கள்:

    தனிப்பட்ட வாழ்க்கை

    முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள், இந்நாள் சாமியார்

    இந்த 'மந்திர சக்தி' கொண்ட மத போதகர் போலே பாபா என்ற நாராயண் சாகர் விஸ்வ ஹரியின் இயற் பெயர், சூரஜ் பால்.

    தன்னைப் பிரகடனப்படுத்திய கடவுள் ஆவதற்கு முன், அவர் புலனாய்வுப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றினார்.

    அவர் 1999 இல் விருப்ப ஓய்வு பெற்று, தனது பெயரை மாற்றிக்கொண்டு, பகதூர் நகரியில் தனது ஆன்மீக பயணத்தைத் தொடங்கினார்.

    ஒரு குடிசையில் வாழ்ந்து உத்தரபிரதேசம் முழுவதும் பிரசங்கம் செய்தார். எனினும் தற்போது ஹரி தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    வழக்கு பதிவு

    எப்ஐஆரில் ஹரியின் பெயர் இல்லை

    பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 105 (குற்றம் சாட்டப்பட்ட கொலை அல்ல), 110 (குற்றமில்லா கொலை முயற்சி), 126 (2) (தவறான கட்டுப்பாடு), 223 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்), 238 (ஆதாரம் காணாமல் போகும்) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மற்ற அமைப்பாளர்களுடன் தலைமை சேவதர் தேவதாஸ் மதுகர் பெயரிடப்பட்டுள்ளார்.

    எனினும், எப்ஐஆரில் ஹரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

    ஹத்ராஸ் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மதபோதகரின் கால் தூசியை சேகரிக்க ஆதரவாளர்கள் ஓடியதில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு நேர்ந்ததாக தெரிவித்தனர்.

    சம்பவம் பற்றி அறிந்த மதபோதகர் 

    தொண்டர்களுடன் கால் பேசிய மதபோதகர்

    போலே பாபா, மதியம் 1:40 மணிக்கு சம்பவ இடத்தை விட்டு வெளியேறினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    அவரின் மொபைல் அழைப்புகளை ஆராய்ந்ததில், அவருக்கு மதியம் 2:48 மணிக்கு அவரது முக்கிய அமைப்பாளர் தேவ் பிரகாஷ் மதுக்கரிடமிருந்து அழைப்பு வந்ததுள்ளது. அவர் இந்த சம்பவம் பற்றி அவருக்கு தெரிவித்திருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது.

    பின்னர் இரண்டாவது அழைப்பு பாபாவிடமிருந்து இரண்டு நிமிட, பதினேழு வினாடி நீடித்துள்ளது. பாபாவின் தொலைபேசி இருப்பிடம் அவரது மெயின்புரி ஆசிரமத்தில் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 4:35 மணி வரை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நேரத்தில் மூன்றாவது அழைப்பு, அமைப்பாளர் தேவ் பிரகாஷின் மனைவி ரஞ்சனாவுடன் கிட்டத்தட்ட பதினொன்றரை நிமிடங்கள் நீடித்ததுள்ளது.

    அதன் பின்னர் அவரது தொலைபேசி சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.

    உயர்மட்ட குழு

    உ.பி அரசு விசாரணை ஆணையத்தை உருவாக்கியுள்ளது

    ஜூலை 2 ஹத்ராஸ் கூட்ட நெரிசலை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா (II) தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதித்துறை விசாரணைக் குழுவை உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ளது.

    இதற்கான அறிவிப்பை ஆளுநர் ஆனந்திபென் படேல் புதன்கிழமை வெளியிட்டார்.

    இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹேமந்த் ராவ் மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பவேஷ் குமார் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    லக்னோவை தளமாகக் கொண்டு, ஆணையம் அதன் விசாரணையை அறிவிக்கும் தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹத்ராஸ்
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ஹத்ராஸ்

    ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர்  உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருக்கும் நித்யானந்தா: முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்  அயோத்தி
    அயோத்தி கோவிலில் ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: பிரதிஷ்டை விழா நிறைவு அயோத்தி
    அயோத்தி ராமர் கோயிலின் முதல் வான்வழி காட்சிகள்: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கப்பட்ட வீடியோ வெளியீடு  அயோத்தி
    அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025